உண்மையில் நீங்கள் யார் ?

உண்மையில் நீங்கள் யார் ?

நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் படைப்பு சிதறல். உங்களுக்கு தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அனுபவங்களை தாண்டி, வேறு எதோ ஒன்று சிறப்பானதாக, உயர்ந்ததாக உள்ளது என்பதை நீங்கள் உணருங்கள். அதுதான் உங்கள் உண்மையான சுயம்.

வீடியோ காண இங்கே CLICK செய்யவும்

நம் வாழ்க்கை இத்தனை போராட்டமானதாக இருப்பதற்கு  இந்த சமூக அமைப்பு, கல்வி, கலாசாரம் போன்றவை  எல்லாம் நம் உணர்வுகளுக்கு இல்லாமல், நம் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே காரணம். இதனால் தான் நம் இருப்பின் உண்மையான நோக்கம் நமக்கு புரிவதே இல்லை. மனம்,உடல், உணர்வு,ஆன்மா இவை எல்லாம் ஒரே இயக்கமாக இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

Free stock photo of sky, person, night, dark

மதங்களிலும், அது சார்ந்த நம்பிக்கைகளிலும் ஆழ்ந்திருக்கும் மனம் இவற்றை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை; ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், மதங்களைப்பற்றிய ஆழமான, தெளிவான புரிதல் இருந்தால், மதங்களும் இவற்றை தான் அடிப்படையாக கொண்டது என்பது புரிய வரும்.

மதங்களை சார்ந்தில்லாத மனிதன் கூட தன ஒரு தெய்விக படைப்பு என்பதை உணர வேண்டும். நீங்கள் படைக்கப்பட்டதற்கு  எதோ ஒரு நோக்கம் உள்ளது. உங்களுடைய உண்மையான சுயத்தை அறிந்துகொள்ளும்போதுதான் உங்கள் செயல்களில் உண்மைத்தன்மை இருக்கும். உண்மைத்தன்மை என்பது அன்பின் அடிப்படையில் அமைவது. எல்லோரும் அந்த ஒரே மூலத்திலிருந்து வந்தர்வர்கள் தான். மற்றவரை நேசிக்கும் பொழுது நான் என்னையும் நேசிக்கிறேன். மற்றவரை மதிக்கும் பொழுது, நான் என்னையும் மதிக்கிறேன். அடுத்தவரை காயப்படுத்தும்பொழுது நான் என்னையும் காயப்படுத்திக்கொள்கிற

Free stock photo of dawn, sky, sunset, person

உங்கள் உடல், மனம், உணர்வு ஆகியவை இணைந்து செயல்பட்டுதான் உங்களுக்கான உலகம் படைக்கப்படுகிறது.  நமக்கு சொல்லிக்கொடுக்கப்படுபவை மூலம் பெறப்படும் அறிவு மட்டுமே நாம் அல்ல. அந்த அறிவுக்கான பயன்பாடு சில நேரங்களில் மட்டுமே அத்தியாவசியம் ஆகிறது. மற்றபடி நம் பிறப்பின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள இந்த அறிவு பயன்படுவதில்லை. இன்னும் சொல்ல போனால் அது ஒரு தடையாக தான் இருக்கிறது.

இந்த ஆற்றலை முழுமையாக புரிந்துகொள்ள, நாம் இந்த பிரபஞ்சத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிரபஞ்சம் ஆற்றலால் இயங்குகிறது. எல்லாமே ஆற்றல் தான். விஞ்ஞானமும் இதை ஒப்புக்கொண்டுள்ளது.

நாம், பல சிக்கலான பாகங்களை கொண்ட ஒரு எளிமையான படைப்பு.

நாம் தான் ஆத்மா; நாம்தான் ஆற்றல்; நாம்தான் சக்தி. உடல்,மனம்,உணர்வு என்ற இந்த 3ஆற்றலும் இணைந்து இயங்கும்பொழுது, எல்லாம் எளிதில் புரிந்துகொள்ளப்படுகிறது; கையாளப்படுகிறது. அப்பொழுது உங்கள் அனுபவங்கள் எல்லாம் மாறுபடுகிறது. வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்க துவங்குகிறது; மகிழ்ச்சி எப்பொழுதும் மேலோங்கி நிற்கிறது.

 

Add Comment