WHAT TO DO IN LIFE ?
வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா?
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள்.
வயதாகி கொண்டே போனாலும், நம்மில் பலருக்கும் கூட வாழ்க்கையில் உண்மையில் என்ன தேவை என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிவதில்லை.
இது பள்ளி பருவத்திலேயே தொடங்கி விடுகிறது.
“வாழ்க்கையில் நீ என்னவாக வேண்டும்?” என்று ஆசிரியர்கள் கேட்கும்போது, பெரும்பாலான குழந்தைகள் பொறியாளர், வழக்கறிஞர், போலீஸ்காரர், விண்வெளி வீரர், மருத்துவர் என்று பொதுவான பதில்களை தான் கொடுக்கிறார்கள்.
பின்பு இறுதியாக பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து, ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வரை.
இந்த விருப்பங்கள் குறைந்தபட்சம் 10 முறையாவது மாறுகிறது.
நம்மில் பெரும்பாலனோர் ஒரு வேலையில் சேர்ந்துவிடுகிறோம் அல்லது தொழில்முனைவோர்களாக ஆகிவிடுகிறோம்.
ஆனாலும் கூட, நம் வாழ்க்கையிலிருந்து என்ன பெற வேண்டுமென தெளிவாக தெரிவதில்லை.
வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடிப்பதற்கான பயணம் மிகவும் கடினமாக இருக்கிறது.
உலகில் உள்ள அனைவருமே இந்த நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
என்றாலும், நம்மை நாமே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்,
“என் வாழ்க்கை அர்த்தம் என்ன?”
“என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?”
“என் வாழ்க்கையை எப்படி செலவழிக்க விரும்புகிறேன்?”
நம் வாழ்வின் நோக்கம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம்.
இது நம் கடமை
ஆனால், ஒரு சிலர் மட்டுமே இதை அறிந்திருக்கிறார்கள்.
நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நாம் கண்டுபிடிக்காதவரை உண்மையான மகிழ்ச்சியை நாம் காண மாட்டோம் என்று நம்பிக்கொண்டு தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம்.
நம்மில் பெரும்பாலோர் சுமந்து கொண்டிருக்கும் பெரிய சுமை இது.
ஆனால், நம் இருப்பைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்வதன் மூலம், இந்த சுமைகளை நீக்கலாம்.
நாம் அனைவரும் இந்த உலகத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் தான் வாழ்கிறோம்.
இந்த காலகட்டத்தில், நம் வாழ்க்கையில் நாம் பயனற்ற செயல்களைத் தொடருவதன் மூலம் நேரத்தை வீணடிக்கலாம்.
அல்லது நமக்கும் மற்றவர்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது ஒன்றை செய்ய முயற்சி செய்யலாம்.
நீங்கள் உண்மையிலேயே முக்கியமானதாய் ஏதாவது செய்தால், உடனடியாக உங்கள் வாழ்க்கையை ஒரு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கிறீர்கள்.
அது அத்தனை கடினமல்ல. மிகவும் எளிதானது.
ஆனால், உங்கள் வாழ்க்கையின் நோக்கம் குறித்து உங்களுக்கு சந்தெகம் வந்தால், நீங்கள் எப்பொழுதும் குழப்பத்தில் தான் வாழ்வீர்கள்.
சொல்லப்போனால், 20 வருடங்கள் ஆனாலும், மீண்டும் மீண்டும் அதே கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பீர்கள்.
அதாவது, நீங்கள் முக்கியமாக உணரும் அந்த நடவடிக்கைகள் தொடங்கும் வரை கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பீர்கள்.
வாழ்க்கையின் ஒரே உண்மையான நோக்கம் என்னவென்றால் நீங்கள் முக்கியமான ஒன்றை செய்ய வேண்டும்.
நீங்கள் முக்கியமான ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறீர்கள்.
நமது வாழ்க்கையின் நோக்கத்தை நாம் கண்டுபிடிப்பதில்லை, அர்த்தமுள்ள ஒன்றை செய்து அதை உருவாக்குகிறோம்.
நமது வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் உண்மையில் கேட்க வேண்டிய கேள்வி என்ன தெரியுமா?
“உண்மையில், நான் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஏதாவது இருக்கிறதா?”
உங்கள் மகிழ்ச்சிக்காக அடிப்படை கேள்வி இதுதான்.
உளவியலாளர்கள் நம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு வாழ்கையில் ஒரு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.
வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தவர்கள் மகிழ்ச்சியாகவும், குறைவான மனச்சோர்வுடனும், ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்க்கையில் திருப்தியடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எனினும், பெரும்பாலான மக்கள் தியாகங்களை செய்ய தயாராக இல்லை.
எந்த வலியும், கஷ்டமும் இல்லாத சுலபமான வாழ்க்கை அவர்களுக்கு வேண்டும்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
கனவுகள் இல்லாத வாழ்க்கையில் எந்த பயனும் இல்லை.
இது போன்ற சுலபமான வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
உங்கள் பொருள் சார்ந்த தேவைகளும் விருப்பங்களும் உடனடியாக நிறைவேறும்.
நீங்கள் அளவிட முடியாத செல்வம் செழிப்பு பெற்றிருப்பீர்கள்.
ஆனால், கேள்வி என்னவென்றால், அத்தகைய ஒரு வாழ்வை வாழ்வதன் மூலம் நீங்கள் இவ்வுலகத்திற்கு என்ன கொடுக்கிறீர்கள்?
உங்கள் வாழ்க்கை ஒரு சிறிய, குறுகிய வட்டத்தில் இயங்குகிறது.
இப்படிப்பட்ட வாழ்க்கையில் என்ன அர்த்தமும் இருக்கப்போகிறது?
நீங்கள் உங்கள் உண்மையான சுயத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அது உங்கள் வாழ்க்கையின் எல்லா மாயைகளையும் அகற்றும்.
உங்களுக்கு முக்கியமானது என்னவென்று உங்களுக்கு உடனடியாக தெரியவரும்.
அது உங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்.
தலைகீழாக மாற்றிவிடும்.
உங்கள் உண்மையான சுய மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பொழுது இந்த உலகதிற்கு உங்களின் பங்களிப்பு இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் கவனம் செலுத்துங்கள்.
அவை உங்கள் வாழ்க்கைக்கு ரசனையை கொடுக்கும்.
உங்களை தவிர வேறு யாருக்காவது உதவும் நோக்கத்துடன், சில விஷயங்களை செய்யுங்கள்.
யாராவது ஒருவரின் வாழ்கையில் உங்களால் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவர முடியுமா?
நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் பன்மடங்கு பெருகி மீண்டும் நம்மிடம் வருகிறது.
உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை புரிந்துகொள்ள, உங்கள் திறமையின் அடிப்படையில், உங்களையும் மற்றவர்களையும் இணைக்கும் அர்த்தமுள்ள செயல்களைக் கண்டுபிடியுங்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் முடிவு செய்ய முடியாது.
உங்கள் செயல்பாடுகள் சரியானதா இல்லையா என்றும் யாரும் சொல்ல முடியாது.
உங்கள் வாழ்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.
அதனால், உங்கள் நடவடிக்கைகள் உங்களை மட்டுமே மையமாக வைத்து, ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கக்கூடாது.
அதற்கு பதிலாக, புதிய உயரங்களை தொடும் உயர்ந்த இலட்சியங்களை உருவாக்குங்கள்.
ஆனால் ஒன்று நிச்சயம்.
உங்களை சுதந்திரமாக செயல்பட வைக்கும் அந்த காரணத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், அர்த்தமும், நோக்கமும் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கலாம்.

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.
I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !
For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM