உங்களையே நீங்கள் நம்புவது எப்படி? – HOW TO TRUST YOURSELF

Sending
User Review
2.5 (2 votes)

உங்களையே நீங்கள் நம்புவது எப்படி?

HOW TO TRUST YOURSELF?

——————————————–

  1. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு

Trustநீங்கள் செய்யும் தவறுகளுக்கு புறச்சூழல்களை குறை சொல்கிறீர்களா? அப்படி என்றால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று அர்த்தம். உங்கள் அனுபவங்களுக்கும், தோல்விகளுக்கு நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். சாக்குசொல்வதும், குறை சொல்வதும் உங்களை நீங்களே பலி கொடுப்பது போலாகும். “இதுதான் என் விதி”, “இதில் இருந்து வெளிவர முடியாது” என்று நீங்களே இந்த பிரபஞ்சத்திற்கு உறுதிமொழி அளிக்கிறீர்கள். உங்களுடைய எல்லா தீர்வுகளுக்கும் வேறு ஒருவரை சார்ந்து இருக்கவேண்டிய நிலைக்கு ஆளாகுகிறீர்கள். மாறாக, குறை சொல்வதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நடப்பதை கொண்டு, அதற்கு நீங்களே பொறுப்பு ஏற்கும்பொழுது, உங்களை நீங்களே நம்பத்தொடங்குகிறீர்கள்.

  1. உங்களையே மன்னித்துவிடுங்கள்

Trust

உங்கள் அனுபவங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்கும்பொழுது, நீங்கள் செய்த தவறுகளுக்கு உங்களையே நீங்கள் மன்னிக்கும் தண்மை வந்துவிடும். உங்கள் தவறுகளுக்கு உங்களையே பழி சொல்லாமல், அவற்றில் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன? என்று கவனியுங்கள். உங்கள் ஒவ்வொரு தவறும் உங்களை ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லும் ஒரு வாகனமாக உங்களுக்கு தெரியும். மீண்டும் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் தடுக்கவும் செய்யும்.  உண்மையில் தோல்வி என்பது மிகவும் வலி உண்டாக்குகிற அனுபவம்தான். ஆனால், ஒரு முயற்சி எடுத்தீர்களே ! அதற்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். அந்த துணிவை எண்ணி மகிழுங்கள். நன்றி சொல்லுங்கள். உங்கள் மீதும், அடுத்தவர் மீதும் உள்ள கோபம், ஸ்ட்ராம் போன்றவற்றை புறம் தள்ளுங்கள். உங்கள் இயல்பில் நீங்கள் இருக்கும்பொழுது, உங்களை நீங்கள் நம்பத்தொடங்குகிறீர்கள்.

  1. உங்கள் கடந்தகாலத்துடன் இணக்கம் கொள்ளுங்கள்.

Trust

கடந்தகாலம் பற்றிய சர்ச்சைகள் பல இருந்தாலும், ஒரு உண்மையை மட்டும் யாரும் மறுக்க முடியாது.

கடந்த காலத்தை மாற்றமுடியாது.”

தவறான செயல்களை திரும்பப்பெற முடியாது; காயப்படுத்திய சொற்களை திரும்பப்பெற முடியாது; “இது நடந்திருக்க வேண்டாமே” என்று எண்ணி வருந்தும் அந்த நிகழ்வை மாற்ற முடியாது.

எனக்கு விருப்பமோ இல்லையோ, வேண்டுமோ வேண்டாமோ அதெல்லாம் நடந்துவிட்டது; என் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது.

இதை புரிந்துகொண்டால், கடந்த காலத்தை பற்றி வருந்திக்கொண்டு, நிகழ்கால வாழ்க்கைக்கு அதை காரணம் சொல்லுவது நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பது மிகவும் தெளிவாக புரியும். அது இன்னும் வலிகளையும், குழப்பங்களையும் தான் உருவாகும். கடந்த காலத்தில் வாழ வேண்டாம். அதில் இருந்து வெளியே வந்து விடுவோம். நிகழ்காலத்தில் மட்டுமே வாழும்பொழுது, நம் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படும். ஒரு வளமான, மகிழ்ச்சியான எதிர்காலம் உருவாக அதுதான் நமக்கு உதவும்.

இன்று நாம் செய்வதுதான் நம்முடைய நாளையை உருவாக்குகிறது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டால், இழப்பதற்கு ஒன்று இல்லை என்று உணர்வீர்கள் !

  1. உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள்.

Trust

ஒருவர் தன்மீது நம்பிக்கை வைப்பது, தன் திறமைகள், வலிமைகள், அறிவு போன்றவற்றை தாண்டி, தன் உள்ளுணர்வு சொல்வதை, அந்த ஞானத்தின் வழிகாட்டலைகொண்டு எதையும் துணிவோடு, முனைப்போடு ஈடுபடுவதில் உள்ளது. நம்மை பயமுறுத்தும் அகங்கார அறிவை (   ) கடந்து ஸ் என்று நம் இதயம் சொல்லுவதை செய்ய நமக்கு துணிவும், சுய நம்பிக்கையும் தேவைப்படுகிறது. ஆகவே, உங்கள் உள்ளுணர்வை கடுபிடியுங்கள். அது உங்கள் சுயநம்பிக்கையை அதிகப்படுத்தி, உங்கள் வலிமைகளையும், திறமைகளையும் மேலும் வளர்த்துக்கொள்ள உதவும்.

  1. நீங்கள்தான் உங்கள் குரு.

Trust

நீங்களே உங்கள் வழிகாட்டியாக இருங்கள் !

உங்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்ததைவிட வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாது. நீங்கள் கடந்துவந்த பாதை, உங்கள் வலிகள், வெற்றிகள், தோல்விகள், திறன்கள், பயங்கள், அனுபவங்கள் !!!

இவை எல்லாம் உங்களுக்கே சொந்தமானவை. இது தனித்துவமானது ! உங்களுக்கு மட்டுமே நிகழ்ந்தது ! இவற்றை புரிந்துக்கொள்ள உங்களால் மட்டுமே முடியும்.

புறத்தில் இருக்கும் எந்த அதிகாரமும் உங்களை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் பயன்பெற்ற முறைகளை பற்றித்தான் சொல்ல முடியும். அது உங்களுக்கும் சரியாக செயல்படும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

ஆகவே, உங்களை நீங்களே நம்புங்கள் ! உங்கள் அகத்தில் சென்று உங்களைப்பற்றி முழுமையாக புரிந்துகொள்ளுங்கள். இது ஒருமுறைமட்டுமே செய்யும் வேலை அல்ல. தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் உண்மையான சுயத்தை புரிந்துகொள்ளும் பொழுது, நீங்கள் உங்களையே இன்னும் தீர்க்கமாக, ஆழமாக, உண்மையாக நம்ப தொடங்குவீர்கள் ! அப்பொழுது, இந்த உலகமும் உங்களை நம்பத்தொடங்கும் !

 

வாழ்க வளமுடன்  !

வாழ்க வையகம் !

 

Add Comment