உங்கள் வெற்றியும் தோல்வியும் நீங்கள் படைப்பதே!

உங்கள் வெற்றியும் தோல்வியும் நீங்கள் படைப்பதே!

இந்த உலகம் உங்களைத் தோல்வியடையச் செய்கிறது என்று எப்பொழுதும் நினைக்கிறீர்களா?

உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்று நினைக்கிறீர்களா?

தவறு!

Earth, Global, Network, Business

உங்கள் அதிர்ஷ்டத்தையும் உங்கள் வெற்றிகளையும் தோல்விகளையும் நீங்கள் மட்டுமே உருவாக்க முடியும். எல்லாமே ஒரு காரணத்திற்காக நடக்கிறது என்று நினைப்பவரா நீங்கள்?  நல்லது! ஒரு வழியில், நீங்கள் நினைப்பது சரியானது!

நடக்கும் எல்லாவற்றுக்கு ஒரு காரணமுண்டு. ஆனால் பலரும் நினைக்கும் வழியில் அல்ல. உங்கள் வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் விரும்புவது தான் நடக்கிறது. நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கவில்லையா? ஆம், நீங்கள் தான் காரணம்.  சரியான வாழ்க்கைத்துணையை கண்டுபிடிக்க முடியவில்லையா? ஆம், நீங்கள் தான் காரணம்.

உங்கள் வாழ்க்கை.

உங்கள் நிகழ்வுகள்.

நீங்கள் தான் படைக்கிறீர்கள் !

Technology, Network, Digital, Internet

இது எப்படி?

பிரபஞ்சத்தின் விதிகள் தான் காரணம் ! நேரம், காலம், குவாண்டம் இயற்பியல், அதிர்வலைகள் மற்றும் ஆற்றல். இவை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களைப் படித்து, உங்கள் வாழ்க்கையை மாற்றீ அமைத்துக்கொண்டிருக்கிறது. இது எல்லாம் உங்களுக்காக புதிதாகத் தெரிகிறதா? உண்மையில் அறிவியல் மற்றும் உண்மையான வாழ்க்கை என்பது இதுதான்.

உங்கள் உலகம் ஒரு முக்கிய விதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

ஈர்ப்பு விதி.

ஈர்ப்புச் விதி என்பது, ஒரே அதிர்வலையில் உள்ள ஆற்றல்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்கிறது. ஒரே அலைவரிசையில் உள்ள அதிர்வுகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்கிறது. நீங்கள் என்ன உணர்கிறீர்களோ அதைத்தான் படைக்கிரீர்கள். ஒரு சில நாட்கள் தொடர்ந்து எதிர்மறையான  நிகழ்வுகளே நடக்கிறதா? ஈர்ப்பு விதியின் சரியான அர்த்தம் புரிகிறதா?

இந்தச் சட்டத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும்போது என்ன நடக்கிறது?

உங்கள் இலக்குகள் மற்றும் கனவுகள் எல்லாம் இப்போது நிறைவேறுவதாக, நடப்பதாக நீங்கள் நம்பினால், உண்மையில் என்ன நடக்கிறது? நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கனவுகள் நனவாகும், அற்புதங்கள் நடக்கும். இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே சாத்தியமாகும். எப்படி செய்வது என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை நீங்கள் உருவாக்கலாம்.

படைப்பாற்றலை தொடங்குவதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கு உள்ளன.

  1. நேர்மறையாக இருங்கள்

Ballerina, Ballet Dancer, Dancer, Grazie

இந்த பிரபஞ்சம் எப்பொழுதும் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறது. நீங்கள் சுயநலமாகவும் எதிர்மறையாகயவும் இருந்தால் உங்கள் கனவுகளை நீங்களெ நாசப்படுத்திக்கொள்வீர்கள். உங்கள் உள் உள்ளுணர்வில் கவனம் செலுத்தி, தேவைப்படும் போது மாற்றங்களைச் செய்யவும்.

  1. உள்ளுணர்வுடன் இணைந்திருங்கள்.

Mystery Spirit Question Magic Energy Belie

உங்கள் உள்ளார்ந்த சுயத்துடன் இணைந்திருப்பது மிக முக்கியம். நீங்கள், உங்கள் கனவு வாழ்க்கை பாதையை பின்பற்ற முயற்சிக்கும் போது உங்கள் உணர்வுகளுடன்  இணைந்து இருக்க வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதை அடைவதற்கு ஒரு வழி, தியானம் மற்றும் சுயபுரிதல் மூலம் தான்.

  1. உறுதியாக இருங்கள்! வலுவாக இருங்கள்.

Technology, Abstract, Photography

யாரும் உங்கள் கனவுகளை சிதைக்கவோ, நசுக்கவோ திருடவோ அனுமதிக்க வேண்டாம்.

எல்லோரும் உங்கள் கனவுகளை ஒத்துக்கொள்ளவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டும் என்றோ அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் உங்களைக் கீழே தள்ளி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் கனவுகளே! எல்லாமே முற்றிலும் சாத்தியம். யாரும் உங்கள் இலக்குகளுக்கு இடையில் தடையாக நிற்க விடாதீர்கள்!

பிரபஞ்சம் உங்கள் பக்கத்தில் இருந்தால் அது அதிர்ஷ்டத்தைக் காட்டிலும் சிறந்தது!

Add Comment