எண்ணம் போல் வாழ்வு – அள்ளித்தரும் பிரபஞ்ச வள்ளல்

எண்ணம் போல் வாழ்வு – அள்ளித்தரும் பிரபஞ்ச வள்ளல்

Power of Positive Thinking

நம் எண்ணங்கள் எல்லாம் வெளிப்பாடாக ஆகின்றன. நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம்.

நாம் நம் ஆழ்மனதில் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.  ஆனால், நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதை விட நமக்கு என்ன வேண்டாம் என்பதை பற்றித்தான் அதிகம் சிந்திக்கிறோம்.

ஆனால், இந்த பிரபஞ்சம், நாம் என்ன எண்ணுகிறோமோ, அதை நம்மிடம் தவறாமல் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓரிரு நாட்கள் உங்கள் எண்ணங்களை கவனிக்க முயற்சி செய்யுங்கள்.

Positive Affirmations

நீங்கள் பயப்படுபவற்றைப்பற்றி, நீங்கள் கவலைப்படுபவற்றைப்பற்றி, உங்களுக்கு தேவை இல்லாததைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா?

அல்லது உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளைப்பற்றி எண்ணி கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் எதைப்பற்றி அதிக நேரம் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களோ, அதைத்தான் ஈர்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மனத்தின் முதன்மையான நிலையே நீங்கள் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.  இந்த நிலையே உங்கள் எதிர்காலத்தை உருவாக்குகிறது.

https://www.youtube.com/watch?v=bcpZaR__LVM&t=2s

கடந்த காலத்தில் வாழ்வது எந்தவித பயனும் அளிக்கப்போவதில்லை. அது நம்மில் மேலும் மேலும் எதிர்மறை எண்ணங்களைத்தான் தோற்றுவிக்கும்.

நம் எதிர்காலமும் அதுபோலவே அமையும்.

ஆகவே ஒரு மகிழ்வான எதிர்காலம் அமைய, நம்முடைய இன்றைய நிலை மிகவும் முக்கியமானதாக ஆகிறது.

இன்று நம் மனதில் முதன்மையாக நேர்மறை எண்ணங்களுடன் ஒரு மகிழ்வான மனநிலையில் வாழ்ந்தால், அதே போன்ற ஒரு எதிர்காலத்தை  உருவாக்குகிறோம்.

இதுதான் ஈர்ப்பு விதியின் அடிப்படை.

Meditation, Consciousness, Body

இதைக்கொண்டு நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் பெறலாம்;

  • மகிழ்ச்சி
  • செல்வம்
  • ஆரோக்கியம்
  • அன்பு
  • உறவுகள்

நாம் ஒரு எல்லையற்ற ஆற்றல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடல், மனம், உணர்வு எல்லாமே எல்லையற்ற ஆற்றல் கொண்ட பெரும் சக்தி.

அதுபோலவே, இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றல் கொண்ட பெரும்சக்திதான் என்பதை நாம் புரிந்து கொண்டால், நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் இந்த ப்ரபஞ்சத்திடம் கேட்டுப்பெறலாம்.

நம் மனம் நம் வசமாகிவிடும். நாம் சொன்னதை கேட்கும்.

நம்மில் பல பேர் இரு வித மனநிலையில் வாழ்கிறோம். சில நேரங்களில் நிறைவாகவும் சில நேரங்களில் குறைவாகவும் உணர்கிறோம். இப்பொழுது, இந்த பிரபஞ்ச விதிகளைப்பற்றி தெரிந்துக் கொண்டுள்ளதால், நம் மனதை எப்படி கட்டுக்குள் வைத்திருந்து நம் விரும்பிய வாழ்வை அமைத்துக்கொள்வது என்பது நமக்கே தெளிவாகப் புரிகிறது.

நம் மனதை கட்டுக்குள் கொண்டுவந்து நாம் விரும்பும் எல்லாவற்றையும் நம் வாழ்வில் ஈர்க்கும் நேரம் வந்துவிட்டது !

 

வாழ்க வையகம் !

வாழ்க இந்த பிரபஞ்ச பேராற்றல் !

 

Add Comment