“என் பாதை சரியானதுதானா?” 6 TIPS FOR SELF-IMPROVEMENT

என் பாதை சரியானதுதானா?”

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சுய முன்னேற்றத்திற்கான 6 கேள்விகள்

6 TIPS FOR SELF-IMPROVEMENT

===================================================================

என் வாழ்க்கை பயணத்தை பார்க்கும்பொழுது, ஓரளவுக்கு மனநிறைவு ஏற்படுகிறது. ஆனாலும், சில நேரங்களில், ஒரு முழுமையற்ற, வெறுமையான மனநிலையும் ஏற்படுகிறது. இன்னும் ஏதோ ஆழமாக, அர்த்தமுள்ள ஒன்றை மனம் தேடுகிறது.

வாழ்க்கையில் நாம் எத்தனையோ பிரச்சனைகளுடன் தான் வாழ்கிறோம். இருந்தும் இவை எல்லாம் கடந்து, நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை, இருப்பின் அவசியத்தை நாம் கண்டுணர வேண்டும். குழந்தை பருவத்தில் நமக்கே உண்டான ஆசைகள் யாவும் இன்னும் நமக்குள்ளே உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அவை நனவாகும் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

https://www.youtube.com/watch?v=CwAJ8xLd5vY&t=2s

Self-Improvement, Motivation, TamilYoutube, Kuviam

  1. உண்மையில் எனக்கு என்ன வேண்டும்?

ஆண்டாண்டுகாலமாக மனிதன் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி. எத்தனையோ விஷயங்கள் செய்ய நினைக்கிறோம்; ஆனால், தினப்படி நாளை கடப்பதற்கே நேரம் போதவில்லை !

உங்கள் தனித்திறன் என்ன, நீங்கள் சிறப்பாக செய்யக்கூடியது என்ன என்று கண்டுபிடியுங்கள் ! உங்கள் சுய முன்னேற்றத்திற்கான ஒரு சிறிய படியாக அது அமையலாம். விடாமுயற்சி அதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும்.

  1. நான் உண்மையில் மாறத்தான் வேண்டுமா?

மனிதனின் சரித்திரம் சொல்லும் ஒரு பேருண்மை என்னவென்றால், “மாற்றம் இன்றியமையாதது.” நாம் வாழும் பரபரப்பான வாழ்க்கை இயக்கத்தில் நம் உள்ளிருக்கும்

ஒளியை நாம் காண்பதில்லை. அதற்கு ஒரு சிறு முயற்சி கூட எடுப்பதில்லை. நம் தனித்துவமான, உண்மையான சுயத்தை தெரிந்துகொள்வது அத்தனை கடினமான செயல் இல்லை. இல்லை என்றால் நாம் எல்லோருமே, ஒருவிதமான செயல்களைத்தானே செய்துகொண்டிருப்போம்? ஒரேவிதமான வாழ்க்கையை தானே வாழ்ந்துகொண்டிருப்போம்? நம் வாழ்வில் பல சுவாரஸ்யிமான, உற்சாகமான நிகழ்வுகள் ஏற்பட வேண்டுமென்றால், மாற்றம் இன்றியமையாதது.

  1. இன்று என்னிடம் இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேனா?

Self-Improvement, Kuviam, YoutubeTamil,

நீங்கள் செய்ய நினைத்ததை எல்லாம் செய்து விட்டீர்களா? நீங்கள் செய்ய தவறிய சின்னச்சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உடை, சிகை அலங்காரம்; அரைமணி நேர நடைப்பயிற்சி ; உங்கள் car driver உடன் பழகும் முறை; அடுத்தவரிடம் பேசும் தன்மை; இவற்றில் ஏதாவது ஒன்றில் மட்டு

ம் உங்கள் கவனத்தை செலுத்திப்பாருங்கள்.

  1. என்னிடம் எவ்வளவு இருக்க வேண்டும்?

இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் கிடையாது. ஆனால், உங்களுக்கு அது எந்த அளவுக்கு முக்கியமாக தேவைப்படுகிறது என்பதுதான் முக்கியம். மிகுந்த செல்வம் வேண்டும், பணம் வேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருக்கலாம். ஆனால், அதற்கான தன்முனைப்புகளில் நீங்கள் எந்த அளவுக்கு ஈடுபட தயார்? அதற்காக எதை எல்லாம் விட்டுக்கொடுக்க தயார்?

  1. என்னை உத்வேகப்படுத்துவது எது?

இதற்கு நீங்கள் தான் விடை தேட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதில் முதன்மையாக ஒன்றை தேர்ந்தெடுப்பது சற்று கடினம். இருந்தும், ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள்.

Self-Improvement, Motivation, TamilYoutube, Kuviam, Eegai

  1. என் பாதை சரியானதுதானா?

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு  செய்யவேண்டியது நீங்கள்தான். ஆனால், ஒன்றை தொடங்கும் முன்பே, அதை அடைவது கடினம் என்று நினைத்துவிட்டால், இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடுவதற்கு சமமாகும்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் !

சுயமுன்னேற்றம் என்பது நம் உடலிலும், மனதிலும் நிகழும் மாற்றம் மட்டுமல்ல; நமக்கு என்ன தேவை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, அதை நம் ஆழ்மனதில் உறுதியாக பதியவைப்பதுதான் !

 

வாழ்க வையகம் !

வாழ்க வளமுடன் !

 

Add Comment