User Review
( votes)அறிவும் ஆற்றலும் – Knowledge & Power
அறிவு என்பது ஒரு ஆற்றல். இதற்கு சக்தி தருவது இதை நாம் திறம்பட பயன்படுத்துவதில் தான் உள்ளது. இதை எப்படி செய்வது?
- என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான புரிதல்.
- வரையறுக்கப்பட்ட நம் மன எல்லைகளைப்பற்றிய தெளிவான புரிதல்.
- நமக்கே தெரிந்தவற்றைக் கொண்டு செயல்படுவது.
விவேகமான செயல்பாடு தான் ஆற்றல்.
பங்கு சந்தையில் வணிகம் செய்யும் எல்லோரும் தங்கள் அறிவை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிலர் மட்டுமே அதிக லாபம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் அறிவை விவேகமாக செயல்படுத்த தெரிந்தவர்கள். அறிவின் வரையறைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
எப்படி பாட வேண்டும் என்று புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். ஒருவரிடம் இருந்து பயிற்சியும் பெற முடியும். ஆனால் என்னால் நன்றாக பாட முடியாது. எப்பொழுதுமே என்னால் முடியாது என்று சொல்லவில்லை. தற்சமயம் முடியவில்லை என்று எண்ணுகிறேன். எனக்கு தேவையானதை என்னால் செய்ய முடியவில்லை என்றால், நான் பணம் சேர்க்க வேறொரு தொழிலை செய்வது தான் புத்திசாலித்தனம். எண்ணங்கள் வரையறுக்கும் எல்லைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
https://www.youtube.com/watch?v=gLQrSzRNZjE
நம் அறிவை நாம் விரிவுபடுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால் அதை திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்றால், அது ஆற்றலாக மாறாது.
ஒருவருக்கு மனதில் பல ideas இருக்கிறது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இன்னொருவர் ஒரு புதிய கண்டுபிடிப்பில் ஈடுபடுகிறார். அனால், அதை சரியாக வணிகம் செய்ய தெரியவில்லை. அதில் தனக்குரிய அறிவு குறைபாடை அவர் புரிந்து கொண்டுள்ளார். ஆகவே, அவர் அது சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு தன் கண்டுபிடிப்பை வணிகப்படுத்தி, பெரும் பணக்காரர் ஆகிவிடுகிறார்.
இது தான் ஆற்றல் !
———————————————–

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.
I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !
For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM