ஆழ்மனத்தின் உணர்வுகள் – The Subconscious Mind

ஆழ்மனத்தின் உணர்வுகள் – The Subconscious Mind

————————————————————-

“நம் மேலோட்டமான எண்ணங்களை கடந்து வேறு எதோ ஒன்று உள்ளது” என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றி இருக்கிறதா?

சிறு குழந்தையாக இருந்த காலத்தில், குளக்கரை ஓரமாக நடந்துசெல்லும் போது, ஒரு சிறிய கல்லை நீங்கள் கையில் எடுத்திருக்கக்கூடும். அந்த கணத்தில் உங்கள் மனம், உடல், ஆன்மா அனைத்தும் ஒன்றாக செயல்பட்டு, ஒரு ஒருங்கிணைந்த முயற்சியால் அந்த கல் குளத்தில்  எறியப்பட்டிருக்கலாம்.

இந்த உந்துவிசையினால் குளத்தில் அலைகள் ஏற்பட்டு, அவை குளத்தின் வெளிப்புறத்தை நோக்கி நகர்வதை நீங்கள் கண்டிருக்கக்கூடும்.

நீங்கள்  தான் உங்கள் உயிரின் மையத்திலுள்ள அந்த உந்துவிசை !

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றல்மிக்க சக்தி. இதை கண்கூடாக உங்களால் பார்க்கமுடியாவிட்டாலும் இந்த உண்மை உங்களுக்கு தெளிவாகத்தெரியும் அல்லவா?

உங்கள் ஆழ்மனத்திலுள்ள இந்த ஆற்றலை கண்டுகொள்ள 5 அனுபவங்கள் உங்களுக்கு பயன்தரும்.

நுகர் உணர்வு (THE SENSE OF SMELL)

Subconscious

நம்முடைய மூச்சுக்காற்றின் மூலம் நாம் இந்த பிரபஞ்சத்தை அரவணைத்துக்கொள்கிறோம். நாம் பலவித நறுமணங்களை நம் அகத்திற்குள் ஈர்க்கிறோம். இந்த நறுமணத்தின் சாரத்தை ( essence ) நம் அகம் முழுவதும் பரவச்செய்ய வேண்டும். நம் மூச்சுக்காற்றின் மூலமாக இந்த உலகத்தை நாம் உள்வாங்கும்போது, அதனுடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறோம். அப்பொழுது, அகம், புறம் என்ற பிரிவினை மறைந்து, எல்லாம் இயக்கமும் ஒன்றே என்ற பெரும் புரிதல் நிகழ்கிறது. இது, எல்லையற்ற வழிகளில் ஆன்மா தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு அனுபவம்.

சுவை உணர்வு (THE SENSE OF TASTE)

Subconscious

சுவை உணர்வு இந்த உலகிலுள்ள பல்வேறு தன்மைகளை, தரங்களை புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு குழந்தையாக இருந்தபொழுது, நம் அனுபவங்கள் இந்த உணர்வின் அடிப்படையில்தான் இருந்தது. உண்மையாகவே, இந்த உணர்வின் மூலம், நம் எதிர்கொள்வது நமக்கு பிடிக்குமா, பிடிக்காதா என்று ஒரு முடிவுக்கு வர நமக்கு பெரிதும் உதவி செய்கிறது.

தொடு உணர்வு (THE SENSE OF TOUCH)

Subconscious

இந்த உலகை நாம் உணரும் தன்மை, நம் உடலை தூண்டுகிறது. ஒருவர் நம்மை தொடும்பொழுது, நம் உடலில் பல்வேறு அதிர்வலைகளும் உணர்வுகளும் ஏற்படுகின்றன.  இந்த உணர்வுகளும், அலைகளும், நம் உடல், நம் இருப்பின் அவசியத்தையும், ஆன்மாவின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள நம் ஆழ்மனம் செய்யும் செயல்களே !  உடல் தான் ஆன்மாவின் இருப்பிடம். நம் தனித்துவமான ஆன்மாவை வெளிப்படுத்துவதில் உடலின் பங்கு மிக முக்கியமானது.

பார்வை உணர்வு (THE SENSE OF SIGHT)

Subconscious

பார்வை திறன் மூலம் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை நம் அகத்திற்குள் எடுத்துச்செல்ல முடிகிறது. இதை செய்யும் பொழுது, அகமும் புறமும் ஒன்றாக இணைந்துவிடுகிறது. இறுதியாக, இந்த பார்க்கும் திறன் மெருகேறி, நம் அகத்திலிருந்து பார்க்கும் திறனாக மாறிவிடுகிறது. கண்களால் பார்ப்பது மட்டுமின்றி, நம் ஆன்மாவின் மூலமாகவும், எல்லையற்ற அன்பின் மூலமாகவும் பார்க்க கற்றுக்கொள்கிறோம்.

கேட்கும் உணர்வு (THE SENSE OF SOUND)

Subconscious

ஒலி அதிர்வுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்போது ஏற்படும் எதிரொலிகள் தான் நம் காதுகளை வந்தடைகின்றன. வார்த்தைகளும் ஒலியின் ஒரு வடிவமே. வார்த்தைகளின் அதிர்வுகள் தரும் சமிக்ஞங்களை ஏற்றுக்கொள்வதும் புறம்தள்ளுவதும் நம் விருப்பம். இந்த அதிர்வுகளை நாம் அறிந்துகொள்ளும்பொழுது, நம் ஆன்மாவுடன் நாம் இன்னும் நெருக்கமாகி விடுகிறோம்.

========================================

 

Add Comment