நம் பிறப்பின் மகத்துவம் – The Purpose of Life

Sending
User Review
2 (1 vote)

நம் பிறப்பின் மகத்துவம் – The Purpose of Life

Dr. Deepak Chopra

காலம் ஏற்படுத்தும் இடைவெளியில் வாழும் நாம், நம் உடல் தான் உண்மையானது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த உடல், கண்ணுக்கு தெரியாத, எல்லையற்ற உணர்வு அதிர்வலைகளைக் கொண்ட ஒரு பேராற்றல் மிக்க இயக்கம். நம்முடைய அடிப்படை மெய் என்பது, நம் அகத்துடனும், புறத்துடனும் இணைந்து செயல்படும் மனம்-உடல் என்ற ஒன்றுபட்ட இயக்கமாகும். ஆன்மாவும் நாம் தான்; உணர்வுகளும் நாம் தான். நம்முடைய உண்மையான மெய் என்பது நம் ஒவ்வொரு படைப்பிலும் ஊடுருவி, பின்னி பிணைந்திருக்கும் பிரபஞ்ச பேறாற்றலே. நம்முடைய உண்மையான இயல்பு, நேரம், காலம், இடைவெளி ஆகியவற்றை கடந்த ஒரு நிலை. இந்த நிலையில், நம்மை ஆட்கொள்வது அந்த தூய, களங்கமற்ற, பரிசுத்தமான உணர்வு நிலையே. இந்த நிலை, நம் உடலையும் மனதையும் பரிசுத்தம் ஆக்குகிறது. இந்த ஆற்றல் எல்லையற்றது; வெல்ல முடியாதது; சுதந்திரமானது. இந்த தூய்மையான ஆற்றலே நிலையானது. இந்த பிரபஞ்ச இயக்கம் அனைத்திற்கும் அடிப்படை அதுவே.

இந்த காணொளியை காண >>>>>>>>

 

 

Add Comment