மகிழ்ச்சிக்கான பாதை – Happiness is the way

மகிழ்ச்சிக்கான பாதை – Happiness is the way

Happiness

நாம் எல்லோருமே மகிழ்ச்சிக்காகத்தான் இந்த போராட்டமான வாழ்க்கையை வாழ்கிறோம். எனினும், பல நேரங்களில் மகிழ்ச்சி நமக்கே பிடிகொடுக்காமலே இருக்கிறது. நம்முடைய இந்த நிலை வேறுமாதிரி இருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். நீங்களும் அவ்வாறு நினைப்பவரா?

“இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்?”

இந்த வார்த்தைகளுக்குத்தான் எத்தனை சக்தியை, ஆற்றலை, வீரியத்தை கொடுக்கிறோம்?

இது போன்ற கணவன்/மனைவி எனக்கு அமையாமல் இருந்திருந்தால்?

இதை விட நல்ல வேலை கிடைத்திருந்தால்?

என் பிள்ளைகள் என் பேச்சை கேட்டிருந்தால்?

இந்த பட்டியல் எல்லையற்றது.

https://www.youtube.com/watch?v=jda8-baqgr8&t=47s

ஆனால், உண்மையில், இதில் நமது சக்தியும், ஆற்றலும் மிகவும் வீணடிக்கப்படுகிறது. நம்மில் பலர் எப்படியாவது மகிழ்ச்சிக்கான ஒரு வழியை தேடித் கண்டுபிடிக்க போராடுகிறோம். பலரும் மகிழ்ச்சியை ஒரு நொடிபொழுது உணர்வு என புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், மகிழ்ச்சி என்பது உண்மையில் ஒரு வாழ்க்கை முறையாகும். சில வழிமுறைகளை கடைபிடித்தால், மகிழ்ச்சியை நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கண்டுணரலாம்.

Joy

முதலில், இந்த நொடியில் வாழ தெரியவேண்டும். நேற்று என்பது மாற்ற முடியாதது. நாளை என்பது நிச்சயம் இல்லை. இன்றைய பொழுதே நம்மிடம் இருக்கும் பரிசு. இந்த நொடி தான் உண்மை. ஆகவே, இந்த நொடியில் தான் வாழ முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது, எண்ணங்களின் ஓட்டத்தை, அதன் தன்மையை முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது ஒரு மன நிலை. எண்ணங்களின் பின்னல்களைக் கடந்தது. மனதை அதன் இயல்பில் இயங்க செய்ய, எண்ணங்களை புரிந்து கொள்வது முக்கியமானது.

Journey, Travel

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போக வேண்டும் என்றால் நம் பயணத்தை எவ்வளவு துல்லியமாக திட்டமிடுகிறோம்? எந்த ஒரு சிறு விவரத்தையும் மனதில் கொண்டு கவனமாக இருக்கிறோம் அல்லவா? திட்டத்தில் ஒரு சிறிய தவறு இருந்தாலும் நம் பயணம் அதற்கு ஏற்றார் போல பாதிக்கப்படுகிறது இல்லையா?

இதே போலத்தான் நம் எண்ணங்களும். எண்ணங்களுக்கான  இடத்தை புரிந்து கொள்ள வேண்டும். எங்கே எண்ணெங்கள் தேவை, எங்கே தேவை இல்லை என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

Free stock photo of person, hands, love, woman

நல்லது. இந்த பயணத்தை எப்படி திட்டமிடுவது? இதற்கான அடிப்படை என்ன?

நன்றி.

நம்மிடம் உள்ள குறைகளைப்பற்றி சிந்திக்காமல், நம்மிடம் இன்று இருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும். எதைப்பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோமோ, எதற்கு நம் சக்தியையும், ஆற்றலையும் கொடுக்கிறோமோ, அதுதான் பல்கி பெருகும். அதுவே நம்மிடம் அதிகமாக இருக்கும்.

மகிழ்ச்சிக்கான பாதை ஒன்று உள்ளது.

அது நன்றி !

நம்மில் அனைத்தும் அடக்கம்.

 

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.

I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !

For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM

 

Add Comment