கனவு – சரித்திரமும் விளக்கமும் – The Interpretation of Dreams

கனவு – சரித்திரமும் விளக்கமும்

The Interpretation of Dreams

dreams, spirituality,

எல்லா மனிதர்களும், மிருகங்களும் கனவு காண்கின்றன என்று நமக்கு தெரியும். கனவுகள் ஏன் வருகின்றன, இதன் மூலம் என்ன, இதன் பொருள் என்ன என்று பல கேள்விகளால் மனிதன் கவரப்பட்டுள்ளான்.

கனவுகளைப்பற்றி மனிதன் ஆராய தொடங்கியது கி.மு. 3000-4000 என்று சரித்திரம் சொல்கிறது. இதற்கான ஆதாரங்கள் களிமண் வரைபட்டிகளில் காணப்பட்டுள்ளது. ஆதிகால மனிதனால் கனவுலகிற்கும் உண்மை உலகிற்கும் வேறுபாடு காண முடியவில்லை. அவர்கள் கனவுலகை தங்கள் நிஜ உலகின் தொடர்ச்சியாகவே கண்டனர்.

How to make your dreams come true? Click here to watch video >>>

பண்டைய கிரேக்க, ரோமானிய உலகில் கனவுகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கனவுகள் மூலம் கடவுள் தங்களிடம் நேரடியாக பேசுவதாக அவர்கள் நம்பி வந்தனர்.

பண்டைய எகிப்தில், கனவுகள் மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டது. அங்கிருந்த மதகுருக்கள் தங்களை கனவுகளின் உரைபெயர்பாளர்களாக செயல்பட்டனர்.

பண்டைய எகிப்தியர்கள், கனவுகளைப்பற்றி உருவரை எழுத்துமுறையில் (hieroglyphics) பதிவு செய்திருப்பதை காண முடியும். தெளிவான, குறிப்பிடத்தக்க கனவு காண்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டனர். மேலும் கனவுகளைப்பற்றி புரிந்துகொண்ட விளக்கம் கொடுக்க முற்பட்டவர்கள் கடவுளின் அனுகிரகம் பெற்றவர்களாக கருதப்பட்டு, சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டனர்.

Buddha Buddhism Religion Asia Spiritual Me

பைபிளில், கனவுகளைப்பற்றி 700 முறைக்கும் மேலாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் கனவுகள் கடவுளுக்கு ஈடாக போற்றப்பட்டது. பலரும் அதை ஒரு தீர்க்கதரிசனமாக பார்த்தனர்.  அவற்றை சகுனங்களாக, எச்சரியாக உணர்ந்து, அதற்கு ஏற்றார் போல தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டனர்.  கனவுகள் கடவுளின் மொழி என்று தீர்க்கமாக நம்பட்டது. சில சமூகங்களில் இவை சாத்தானின் மொழியாகவும் கருதப்பட்டது.

அரசியலிலும், ராணுவத்திலும் கூட கனவுகள் அதிகாரம் செலுத்தின. போர் காலங்களில் கனவுகளின் அடிப்படியில் முடிவுகள், வியூகங்கள் அமைக்கப்பட்டன. அரசியலிலும் பல முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு கனவுகளின் வழிகாட்டுதலை நாடினர். மருத்துவ துறையிலும் கனவுகளைக்கொண்டு நோய்க்கான காரணத்தை அறிந்து அதற்கான தீர்வை கண்டறிய முற்பட்டனர்.

பல கலாச்சாரங்களில் கனவுகள் கடவுளுடன் நேரடி தொடர்பில் இருக்க துணை செய்கிறது என்ற ஒரு நம்பிக்கை உண்டு. இன்றும், பலரும், தினம்தோறும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது, நம் ஆன்மா நம் உடலைவிட்டு பிரிந்து வெளியேறி, நம் மூலத்துடன் தொடர்பில் உள்ளதாக நம்பப்படுகிறது.

சீன கலாச்சாரத்தில் இந்த நம்பிக்கை வலுவாக இருப்பதை காண முடியும்.திடீர் என்று விழித்து கொள்ளும்பொழுது ஆன்மா மீண்டும் உடலுக்கு திரும்ப முடியாது என்று அவர்கள் தீர்க்கமாக நம்பினார். ஆகவே தான் alarm clock பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

Fantasy, Light, Mood, Sky, Beautiful

வேறு சில பண்டைய அமெரிக்க சமூகங்களில் கனவுகளில் தங்கள் மூதாதையர் வாழ்வதாக நம்பினார். ஆகவே கனவுகள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு, அவர்களின் ஞானமும், அறிவும் தங்களை வழிநடத்துவதாக கருதினர். கனவுகள் மூலம் தங்கள் பிறப்பின் உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் கண்டுகொள்ள முடியும் என்றும் நம்பினர்.

கனவுகள் பற்றிய இத்தகைய  பார்வைகளும், நம்பிக்கைகளும் 19 ஆம் நூற்றாண்டில் முற்றிலும் மாறியது. இந்த கால கட்டத்தில் கனவுகள் நம் பதட்டத்தை, பயத்தின், வெளிப்புற பாதிப்புகளின், உணவு பழக்கங்களின் எதிர் வினையாக (Reaction ) பார்க்கப்பட்டது. கனவுகள் குறித்த முக்கியத்துவம் குறைய தொடங்கியது.

Sigmund Freud Portrait 1926 Founder Of Psy

ஆனால், பிற்பாடு  டாக்டர். சிக்மாண்ட் பிராய்ட் அவர்களின் வருகையால் மிக பெரிய மாற்றம் உண்டானது. கனவுகள் குறித்த தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்த உண்மைகளால் மனஉளவியல் துறையை வியப்பில் ஆழ்த்தினார். கனவுகளுக்கும் விழிப்பு நிலை வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பயும், எல்லாம் ஒரே இயக்கம் என்பதையும் பல பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து இந்த உலகுக்கு கனவுகளைப்பற்றிய ஒரு புதிய பரிமாணத்தை தந்தார். கனவுகள் பற்றிய விளக்கங்களில், ஆராச்சியில் ஈடுபட்ட பலருக்கும் அவர் முன்னோடியாக விளங்கினார்.

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.

I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !

For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM

 

Add Comment