வெற்றியாளர்களின் யுக்தி – Key to Success

வெற்றியாளர்களின் யுக்தி – Key to Success

வெற்றி (Success) பெற்றவர்களை பின்பற்றுவது நம் வெற்றிக்கான ஒரு வழிமுறை. பொதுவாக, வெற்றிப்பெற்ற பலரும் தங்களின் வெற்றிக்கான காரணங்கள் என்று பலவற்றை சொல்ல விரும்புவார்கள்.

இவற்றை எல்லாம் நாம் தெரிந்துகொள்வது நல்லது என்றாலும், உண்மையில் நம் வெற்றி என்பது வேறொரு புரிதலில் உள்ளது.

Success

வெற்றி (Success) பெற்றவர்கள் கூறுவதை செய்வதைவிட, அவர்களுடைய செயல்களை கூர்ந்து நோக்கினால் நாம் இன்னும் நன்றாக கற்றுக்கொள்ள முடியும். இதுதான் வெற்றியைப்பற்றி தெரிந்துகொள்ள பெரிதும் உதவும். அவர்கள் வெற்றிக்கான செயல்பாடுகள் என்ன என்பதை நம் நுண்ணறிவை (Intelligence) பயன்படுத்தி கவனிக்க வேண்டும்.

http://createyoutube.com/fb/hYtsni2SFoM

என்னுடைய business நண்பர் ஒருவர் தனக்கு குறிக்கோள் வைத்துக்கொள்வதில் (Goal Setting) நம்பிக்கை இல்லை என்று கூறுவார். ஆனால், அவருடைய நடவடிக்கைகளை, செயல்களை கூர்ந்து கவனித்த பொழுது, அவர், அடுத்த 6 மாதத்தில் தன் வியாபாரம் எப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருந்தார் என்பது எனக்கு புரிந்தது. இது உண்மையில் Goal Setting தான். அவர் அதை வேறு விதமாக அழைத்தார். அவ்வளவுதான்.

வெற்றி பெற்றவர்கள் சொல்லும் அனுபவங்களை கேட்பதை நிறுத்தாதீர்கள். ஆனால், அவற்றை உங்கள் நுண்ணறிவால் (Intelligence) புரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றன, சவால்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் ஒரு கிரிக்கெட் வீரர், ஒரு பேட்டியில் தான் அடித்த சிக்ஸர் பற்றிய கேள்விக்கு, “அது அப்படிதான் அமையும் என்று எனக்கு தெரியும்”  என்று சொன்னால், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய visualization என்கின்ற ஒரு பெரிய உண்மை இருக்கிறதல்லவா?

Success

சரியான செயல்களை செய்வது வெற்றிக்கு மிக முக்கியமானது. அவற்றைப் புரிந்துகொள்வது முக்கியம் என்றாலும், முதலில் அவற்றை முயற்சி செய்து பார்ப்பது நல்லது. அது வெற்றிக்கான ஒரு முன்மாதிரியாக அமையலாம்.

இதுபோல தொடர்ந்து செய்யும்பொழுது, எது தேவை, எது தேவையில்லை என்பது தெளிவாகத் தெரியவரும். அப்பொழுது, தேவையில்லாதவற்றை விலக்கிவிட்டு நம் ஆற்றல், திறமை, சக்தி ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் தொடர்ந்து செய்யும் ஒரு வேலை மெருகேறிக்கொண்டே இருந்தால், நீங்கள் அதை வெற்றிகரமாக செய்கிறீர்கள் என்று தானே அர்த்தம்? அப்படியெனில், நீங்கள் தேவையில்லாதவற்றை விலக்கிவிட்டிர்கள் என்று தெளிவாக உங்களுக்கு புரிகிறதா?

Success

இந்த வெற்றி எப்படி சாத்தியமாகிறது என்று புரிய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினாலும், சில நேரங்களில் சிலவற்றை புரிந்து கொள்ளாமல் இருப்பதே அதை இன்னும் சிறப்பாக செய்வதற்கு உதவும். வெற்றியை விளக்கிக்கொண்டிருப்பதை விட, அதில் வாழ்வது தான் சிறப்பு.

ஆகவே, வெற்றிபெற்றவர்கள் சொல்வதைவிட அவர்கள் செய்வதை கூர்ந்து கவனித்து, அவற்றை புரிந்துகொள்வது தான் நம்முடைய வெற்றிக்கான முதல் முயற்சி ஆகும்.

தொடங்குங்கள் !

இன்றே ! இப்பொழுதே !

வாழ்க வையகம் !

வாழ்க வளமுடன் !

————————————-

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.

I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !

For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM

 

 

Add Comment