TIPS TO CREATE A PROPER GOAL STATEMENT – ஒரு முறையான இலக்கு அறிக்கை உங்கள் சாதனையை முடிவு செய்யும்

TIPS TO CREATE A PROPER GOAL STATEMENT

ஒரு முறையான இலக்கு அறிக்கை உங்கள் சாதனையை முடிவு செய்யும்

இந்த உலகத்தில் நம்மை நம் சாதனைகள் மூலம் தான் அளவிடுகிறார்கள்.

ஆனால், பெரும்பாலான மக்கள் தங்கள் சாதனைகளைத் தவறாக தொகுக்கின்றனர்.

அதாவது, நம்மிடம் ஒரு தெளிவான, சரியான திட்டம் இல்லை.

ஆகவே, வாய்ப்புகளை வரும்பொழுது, அவற்றை சந்திப்பதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.

இது ஏனென்றால், நம்முடைய சாதனைகள் வெளிப்புற காரணங்களால் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

உள்ளே இருந்து அல்ல.

Target Goal Success Dart Board Darts Accur

ஒரு குறிக்கோளின் உண்மையான நோக்கம் என்ன?

குறிக்கோளை நிறைவெற்ற ஒரு முறையான இலக்கு அறிக்கை தேவை.

முறையான இலக்கு அறிக்கை என்பது சுயப்பிரகடனம் போல்.

சரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு முறையான இலக்கு அறிக்கை,

உங்கள் நேரம், உங்கள் எண்ணங்கள், உங்கள் முன்னுரிமைகள் என்று உங்கள் முழு வாழ்க்கையையும் சீரமைக்க உதவுகிறது.

உண்மையில், ஒரு முறையான இலக்கு அறிக்கை, ஆழ்மனதில் உருவாக்கப்படும் போது, நீங்கள் வாழ்க்கையை இதுவரை புரிந்து கொண்ட விதம் மாறத்தொடங்கும்.

எல்லா நிறுவனங்களுக்கும் ஒரு முறையான இலக்கு அறிக்கை இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா?

அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இலக்கு அறிக்கை அவசியம்.

உங்களின் முறையான இலக்கு அறிக்கையானது நீங்கள் யார், உங்களுக்கு என்ன தேவை, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் சுயமதிப்பீடு செய்ய கொள்ள உங்களை கட்டாயப்படுத்திக்கொண்டே இருக்கும்.

ஒரு முறையான இலக்கு அறிக்கையின் சில அடிப்படைகள் என்ன என்று பார்ப்போமா?

  1. குறுகியதாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும்.

தென் ஆப்ரிக்கா சிறையில் இருந்த பொழுது உருவாக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவின் இலக்கு அறிக்கை மிகவும் எளிமையானது.

“நிறவெறி முடிவடைய வேண்டும்.”

Dart Target Aim Arrow Goal Point Focus Poi

நேரடி மொழி பயன்படுத்துங்கள். உங்கள் இலக்கு அறிக்கையை எந்த வயதினரும் புரிந்து கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அப்படி செய்தால் சரியான பாதையில் நீங்கள் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.

  1. மாறாத நினைவாக பதிந்திருக்க வேண்டும்.

முறையான இலக்கு அறிக்கை உங்கள் ஆழ்மனதில் ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும்.

தேவைப்படும் போது அதை நீங்கள் உங்கள் நினைவகத்திலிருந்து எடுத்து கையாள முடியாவிட்டால், அது மிக நீண்டது, மிக சிக்கலானது என்று அர்த்தம்.

அப்படி இருந்தால், அதை எளிமைப்படுத்தவும்

உங்கள் சிந்தனையையும், உணர்வுகளையும் எளிதான ஆனால் வலுவான வார்த்தைகளில் சொல்வதுதான் ஒரு முறையான இலக்கு அறிக்கை.

  1. சாக்குகளை அகற்றவும்.

ஒரு திறமையான இலக்கு அறிக்கையை உருவாக்கும் முன் நீங்கள் சொல்லிகொள்ளும் சாக்குகளைப்பற்றி நினைத்துப்பாருங்கள்.

உங்கள் வேலை தான் உங்கள் குறிக்கோள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது உங்கள் குறிக்கோளின் ஒரு பகுதியாக இருக்கலாம் … அல்லது இல்லாமலும் போகலாம்.

உங்கள் வேலை மாறலாம், ஆனால் உங்கள் இலக்கை மாறக்கூடாது.

உண்மையில், சில வேளைகளில், ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு, ஒரு வேலையை மாற்ற வேண்டிய தேவையும் ஏற்படலாம்..

எனவே உங்கள் வேலை தான்  உங்கள் இலக்கு என்று நினைத்துக்கொண்டு ஒரு சிறையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

மிகவும் அபாயகரமான காரணம் ஒன்று உண்டென்றால், அது னமக்கு ஒரு இலக்கு முக்கியம் இல்லை என்று நம்மில் பெரும்பாலோர் நம்புவது தான்.

Maze Labyrinth Solution Lost Problem Chall

“நிச்சயமாக, ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஒரு இலக்கு அறிக்கை வேண்டும். ஆனால் நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு எதற்கு? தேவையில்லை” என்று தான் நம்மில் பலரும் நினைக்கிறோம்.

நாம் இதை உரத்த குரலில் கூறுவதில்லை என்றாலும், நமக்கு நாமே அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டு.

தவறு!

தவறு!

தவறு!

இந்த முட்டாள்தனமான சிந்தனையை நிறுத்துங்கள்!

உங்கள் இலக்கு அதைவிட பெரியது. ஆற்றல் மிக்கது.

உங்கள் சாக்குகள் என்னவென்று கண்டுபிடித்து உடனடியாக நீக்கி விடுங்கள்.

நீங்கள் செய்ததை எண்ணி நீங்கள் மகிழ்வீர்கள்.

இறுதியாக, கடந்த காலத்தில் உங்களைத் தூண்டிய தாக்கங்களிலிருந்து வெளியே வாருங்கள்.

ஒரு முறையான இலக்கு அறிக்கை நீங்கள் நாளை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பது பற்றி அல்ல.

 

Goal Target Dart Board Darts Accurate Comp

எது உங்களுக்கு உற்சாகத்தை தருகிறதோ, அதுதான் முறையான இலக்கு அறிக்கை.

எனவே, கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரல்களை கேட்காமல்,

உங்களுக்குள் எதிர்மறை நிலைகளை உருவாக்கிய அந்த குரல்களை புறக்கணித்துவிட்டு

உங்கள் கனவுகளில் கவனம் செலுத்துங்கள்.

இந்த கணத்தில் வாழுங்கள்

இந்தக்கணம் மட்டுமே உண்மை.

ஒரு சக்தி வாய்ந்த, பயனுள்ள இலக்கு அறிக்கையை இப்பொழுது, இந்தக்கணம் உருவாக்குவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.

I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !

For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM

 

Add Comment