ஆற்றல்மிக்க சுயப்பிரகடனங்களின் பயன்கள் – SELF AFFIRMATIONS

சுயப்பிரகடனங்களின் பயன்கள்

THE BENEFITS OF SELF AFFIRMATIONS

————————————————————————————————

தன் வாழ்க்கையின் முன்னேற்றத்தைப்பற்றி சிந்திப்பவர்கள் எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி, “பயனுள்ள, ஆற்றல்மிக்க சுயப்பிரகடனங்கள் (SELF AFFIRMATIONS) எழுதுவது எப்படி?”

பலர், ஏற்கனவே எழுதப்பட்டுள்ள சுயப்பிரகடனங்களை தேடிச்சென்று, அவற்றை தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்புவார்கள். ஆனால், எல்லா நேரங்களிலும் இது வேலை சேயும் என்ற உத்தரவாதம் இல்லை.

SELF AFFIRMATIONS

என்னுடைய அனுபவத்தில், நமக்கு ஏற்றாற்போன்ற சுயப்பிரகடனங்கள் ஏற்படுத்தி கொள்வதே சிறந்தது.

https://www.youtube.com/watch?v=C_sj3PDY1z8

முதலில், சுயப்பிரகடனங்கள் ஏன் எழுதவேண்டும் என்று நம் குறிக்கோளை குறித்து ஒரு தெளிவு பெறலாம்.

இன்றைய நம் வாழ்க்கை சூழ்நிலை, நம் கடந்தகாலத்தின் விளைவு என்பது நமக்கு  தெரிந்த விஷயம்.எனில், நம் எதிர்காலம் நம்முடைய இன்றைய வாழ்க்கை சூழ்நிலையை பொறுத்து தான் அமையும் ?

SELF AFFIRMATIONS

நம்முடைய நம்பிக்கைகள், எண்ணங்கள் குறித்து ஒரு தெளிவான புறத்தில் இதற்கு அவசியம் ஆகிறது. உங்களுடைய வாழ்க்கையின் பலவித அம்சங்களைப்பற்றி – வேலை, செல்வம், ஆரோக்கியம், உறவு, குடும்பம் – யோசித்துப்பாருங்கள்.

இவை எந்தவிதமான உணர்வுகளை, எண்ணங்களை தோற்றுவிக்கின்றன என்று பாருங்கள். உதாரணத்திற்கு, உங்கள் நிதிநிலை சரி இல்லை என்றால், உங்களுக்கு “என்னிடம் போதிய அளவு பணம் இல்லை”, “என்னால் கடன் வாங்குவதை தவிர்க்க முடியவில்லை” என்பது போன்ற எண்ணங்கள் வரலாம். இதை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கும்பொழுது, இதற்கு வலு சேர்க்கும் ஒரு புறசூழலையே நீங்கள் உருவாக்குகிறீர்கள்.

சுயப்பிரகடனங்களை சரியாய் எழுதி பயன்படுத்தும்பொழுது, அவை இதுபோன்ற நம் நம்பிக்கைகளை மாற்றுகிறது.

நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, சுயப்பிரகடனங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.

“நான் ஆரோக்கியமான,சத்துள்ள உணவு உண்பேன்” என்று சொல்வதற்கும் ” நான் தினம்தோறும் ஆரோக்கியமான,சத்துள்ள உணவு உணர்கிறேன்” என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள முடிகிறதா?

இரண்டாவது சுயப்பிரகடனம், இன்றைய உங்கள் அனுபவத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

முதல் சுயப்பிரகடனம், நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்தில் அதை வைத்து பார்க்கிறது.

உங்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால், நான் பலவீனமான, எந்த தகுதியற்ற, அழகில்லாதவன் என்ற நம்பிக்கையை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த சொற்களை மாற்றி, நான் அழகாக, ஆரோக்கியமாக, நல்ல உடல் பலத்துடன் அடுத்தவரை கவரும் விதமாக இருக்கிறேன் என்று நேர்மறை சொற்களை அமைத்து பயன்படுத்திப்பாருங்கள் !  தொடக்கத்தில் உங்களுக்கு நீங்களே பொலிஸ் சொல்வது போலத்தோன்றும். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்று சொல்வதை வழக்கமாகிக்கொண்டால், நாளடைவில் இது  உங்கள் ஆழ்மனதில் சென்று  ஒரு உணர்வாக பதிந்துவிடும். பிரபஞ்சம் எப்போதும் நம் ஆழ்மன உணர்வுகளுக்குத்தானே பதில் சொல்கிறது !

SELF AFFIRMATIONS

முக்கியமான 2 சூழ்நிலைகளில் சுயப்பிரகடனங்கள் பயன்படுத்த வேண்டும்.

  1. முரண்பட்ட, எதிர்மறையான நம்பிக்கை தோன்றும்போது.

துணிக்கடையில் உள்ள ஒரு கண்ணாடியில் உங்களைப்பார்க்கும்பொழுது, “என்ன இது? நான் இவ்வளவு குண்டாக, அசிங்கமாக இருக்கிறேன். இந்த கடையில் உள்ளவர்கள் எல்லோருமே என்னையே ஏளனத்துடன் பார்க்கிறார்கள். எனக்கு ஏற்ற உடை இந்த கடையில் கிடைக்காது. இந்த உடைகளை அணிய எனக்கு தகுதி இல்லை” போன்ற எண்ணங்கள் ஏற்படலாம். அந்த நொடியில், ஒரு ஓரமாக சென்று, அமைதியாக நில்லுங்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களை ஒரு அழகான, ஆரோக்கியமான, வலிமையான, மனிதராக காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலே கூறிய சுயப்பிரகடனத்தை (நான் அழகாக, ஆரோக்கியமாக, நல்ல உடல் பலத்துடன் அடுத்தவரை கவரும் விதமாக இருக்கிறேன்“)  முழு நம்பிக்கையுடன், மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள்.

  1. எப்பொழுதெல்லாம் முடியுமோ

எதிர்மறை சூழ்நிலைகளுக்காக காத்திருக்க  வேண்டாம் !   உங்களுக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுது இந்த சுயப்பிரகடனங்களை பயன்படுத்துங்கள் சுயப்பிரகடனங்களை பட்டியலிட்டு, உங்கள் வாகனத்தின் உள்முகப்பில், உங்கள் குளியலறை சுவற்றில், உங்கள் பர்சில், உங்கள் அலுவலக மேசையில், என்று தினம் நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவையுங்கள். நீங்கள் எத்தனை முறை உங்களுடன் சுயமாக இந்து போன்று பேசிக்கொள்கிறீர்களோ, அத்தனை சுலபமாக, சீக்கிரமாக உங்கள் பலவீனமான எண்ணங்களை மாற்றி சக்திமிக்க எண்ணங்களால் உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்.

ஆனால், அடிப்படையாக ஒரு உண்மையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சுயப்பிரகடனங்கள் உணர்வின் அடிப்படையில் செயல்படுகின்றன. நீங்கள் சொல்லிக்கொள்ளும் சுயப்பிரகடனங்கள் உங்கள் உணர்வுடன் கலந்திருக்க வேண்டும். வெறும் வார்த்தைகளாக, மேலோட்டமாக சொல்லும்பொழுது எதுவும் மாறாது. ஏன் தெரியுமா? எத்தனை சக்திமிக்க சுயபிரகடனம் செய்தாலும், அடிமனதில், “இது நடக்குமா?” என்று பழைய நம்பிக்கையிலேயே வாழ்ந்தால், எப்படி மாற்றம் வரும்?

இரண்டு எதிர் மறையான நம்பிக்கைகள் ஒன்றாக செயல்பட முடியாது. எதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அந்த ஒன்றுதான் நம் அனுபவமாக புறத்தில் உருவாகுகிறது.

ஆகவே, உங்கள் சுயப்பேச்சுக்களை, சுயப்பிரகடனங்களை, உணர்வுடன், நம்பிக்கையுடன், உறுதியுடன், ஈடுபாட்டுடன் சொல்லுங்கள். அப்பொழுது உங்கள் பழைய நம்பிக்கைகள் சக்தி இழந்து, மறைந்துவிடும்.

இதுவே மாற்றத்திற்கான ஒரே, உண்மையான வழி !

வாழ்க வையகம் !

வாழ்க வளமுடன் !

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.

I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !

For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM

 

 

Add Comment