நம் படைப்பாற்றலை தடுக்கும் 3 தடைகளை நீக்குவது எப்படி?

நம் படைப்பாற்றலை தடுக்கும் 3 தடைகளை நீக்குவது எப்படி?

எல்லா மனிதர்களுக்கும் படைக்கும் ஆற்றல் உள்ளது. இது இயற்கை கொடுத்த பரிசு. ஆனால், பெரும்பாலான நேரங்களில், தேவை இல்லாத எண்ணங்களினால் இந்த ஆற்றலுக்கு நாமே தடை போட்டு கொள்கிறோம். இதனால் பல பிரச்சனைகளை உருவாக்கிக்கொள்கிறோம். ஆனால், நம் மனதின் அந்த எல்லையற்ற சக்தியை உணர்ந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 அடிப்படை வழிகளை புரிந்துகொள்வோம்.

  1. ஊகங்களில் வாழ வேண்டாம்.

Question, Question Mark, Survey, Problem

சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு தான் ஊகங்கள். சரியான முடிவுக்கு வர தேவைப்படும் எல்லா தகவல்களும் கிடைக்கும் வரை நமக்கு பொறுமை இருப்பதில்லை.

உங்களில் பலருக்கும் இந்த கதை தெரிந்திருக்கலாம்.

பணத்தை பெற்றுக்கொண்ட ஒரு வங்கி வாடிக்கையாளர், எண்ணிப்பார்த்தபின், அதை கொடுத்த வங்கி ஊழியரிடம் “அய்யா, ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிட்டது போலிருக்கிறது” என்று கூறினார். அதற்கு அந்த ஊழியர், “மன்னிக்கவும் அய்யா. வங்கி நேரம் முடிந்துவிட்டது. என்னால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாது. நீங்கள் முன்னமே எண்ணி பார்த்திருக்க வேண்டும்” என்று கூறினார்.  அதற்கு அந்த வாடிக்கையாளர், “அப்படியா? நீங்கள் கொடுத்ததில் ஒரு 500 ருபாய் நோட்டு அதிகமாக உள்ளது. நன்றி.” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

நீங்கள் ஒரு முடிவுக்கு வரும்முன், எல்லா தகவல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது இல்லையா?

  1. மற்றவர் பார்வையில் பாருங்கள்

Focus Telephoto Lens Lens Loupe Hand Photo

திறந்த மனதுடன் இருப்பவர்கள், ஒரு விஷயத்தை பற்றிய அடுத்தவர் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்ள தவறுவதில்லை. அடுத்தவருடைய எண்ணங்களை மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஒரு புகழ்பெற்ற ஓவியர் அவர். MODERN ART எனப்படும் ஓவிய வகையில் தேர்ச்சி பெற்றவர். பேரும் புகழும் கொண்டு வாழ்பவர். ஒரு விமான பயணத்தின் பொழுது, தன அருகில் இருப்பவருடன்  உரையாடலில் ஈடுபட்டார். அவரோ MODERN ART என்ற வகையை ஏற்று கொள்ளாதவர். பர்சிலிருந்து தன மனைவியின் புகைப்படத்தை எடுத்து அந்த ஓவியரிடன் காண்பித்து, “என் மனைவி இப்படி இருக்க வேண்டும். வேறு எதோ இயற்கைக்கு மாறான ஒரு தோற்றத்தில் அல்ல” என்று கூறினார். அதை சிறிது நேரம் பார்த்த அந்த ஓவியர், “உங்கள் மனைவி மிகவும் குட்டையாக இருக்கிறார்” என்று கூறினார்.

குதிரைக்கு கண் கட்டி விட்டதுபோல வாழ்க்கையை பார்க்க கூடாது. பல நேரங்களில் ஒரு விஷயத்தை பற்றி அடுத்தவரின் கருத்து நமக்கு பெரிய புரிதலை கொடுக்கக்கூடும்.

  1. சோம்பேறித்தனமான பழக்கங்களை கைவிடுங்கள்

Time, Woman, Face, Routine, Habit

தெளிவான சிந்தனைக்கு தடையாக நம் பழக்கங்கள் பெரிதும் காரணமாக இருக்கிறது. சிறுவயது முதல் நம் மனதில் திணிக்கப்பட்ட சில பழக்கங்களினால், நாம் ஒரு வரையறைக்குள் சிக்கிக்கொள்கிறோம். ஒரு முறை ஏற்பட்ட விளைவு எப்பொழுதும் அதேபோலத்தான் விளையும் என்ற எண்ணத்தில் வாழ கூடாது. இப்படி நினைக்க தொடங்கினால், காலப்போக்கில் அதுவே பழக்கமாக மாறிவிடும். ஆகவே, திறந்த மனதுடன் இருங்கள். நடப்பதை அதன் போக்கிலேயே சென்று புரிந்துகொள்ளுங்கள்; தெளிவு பெறுங்கள்.

இந்த 3 யுக்திகளின் அடிப்படையில் உங்கள் எண்ணங்களின் தன்மையை அமைத்துக்கொள்ளுங்கள். அப்படி செய்யும் பொழுது, மனம், தான் சந்திக்கும் சவாலான சூழ்நிலைகளை, எப்படி புத்துணர்ச்சியுடன், புதிதான அணுகுமுறைகளால் எதிர்கொண்டு வெற்றிபெறுகிறது என்பதை நீங்களே உணர முடியும்.

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.

I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !

For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM

 

 

 

 

Add Comment