பத்தாயிரம் புத்தகமும் கபாலமும் – சிந்தனைக்கு ஜென் கதை

லிபோ என்று ஒருவன் இருந்தான். வெகு இளமையில் இருந்தே அவனுக்கு புத்தகங்கள் படிப்பதில் பேரார்வம். எந்த ஊருக்கு சென்றாலும் அவன் தேடி செல்வது நூலகத்தைதான். இந்த விஷயம் தான் என்று தன்னை தானே குறுக்கிக் கொள்ளாமல், வெவ்வேறு துறைகளை பற்றி கிடைத்த விதம் விதமான புத்தகங்களை தேடி தேடி படித்தான்.

ஒரு முறை ஒரு ஜென் குருவை அவன் சந்தித்தான். சிறிது நேரம் சம்பாஷனைக்கு பிறகு அவன் குருவிடம்

குருவே, எனக்கு ஒரு சந்தேகம். விமல கீர்த்த நிர்தேச சூத்திரமென்பதில் மேரு மலையைக் கூட ஒரு கடுகுக்குள் அடைத்து விடலாம் என்று போட்டிருக்கிறதே, இது உளரல் இல்லையா? இது எவ்வாறு சாத்தியம்?” என்று வினவினான்.

நீ இதுவரை எத்தனை புத்தகங்கள் படித்திருப்பாய்?” என்று கேட்டார் குரு.

பத்தாயிரத்தை தாண்டி விட்டது குருஎன்றான் பெருமிதமாக.

இன்னும் எத்தனை புத்தகங்களை படிக்க உன்னால் முடியும்?”

உடல் தளர்ந்து படுத்து விட்டாலும், என் இறுதி மூச்சு வரைக்கும் படுத்த படியே படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன், குரு

இப்படி பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை அடைத்து வைக்கும் அளவுக்கு உன் கபாலத்தில் இடம் இருக்கிறதா?”

என்று சிரித்தபடியே கெட்டு விட்டு நடையை தொடர்ந்தார் குரு.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. நூலகங்கள் ஏறினாலும், பத்தாயிரம் நூல் படித்தாலும், வாழ்வியல் ஞானம் பிறக்காது. ஒன்றும் படிக்காமலும் பகுத்தறிவு பிறக்கும்.

Add Comment