உறவுகளும் ஈர்ப்பு விதியும் – The Law Of Attraction And Relationships

உறவுகளும் ஈர்ப்பு விதியும்

The Law Of Attraction And Relationships

————————————————————————–

திடீர் என்று ஒரு மனிதர் மாயமாக உங்கள் முன் வந்து நின்று நீங்கள் தேடிக்கொண்டிருந்த ஒரு தகவலை உங்களுக்கு தந்திருக்கிறாரா? சரியான இடத்தில, சரியான நேரத்தில் நீங்கள் செய்யவிருந்த ஒரு தவறான செயலை உங்கள் நண்பர் தடுத்து நிறுத்தி இருக்கிறாரா?

அந்த தருணங்களில் உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன என்று உங்களால் நினைவுபடுத்தி பார்க்க முடிகிறதா?

இதே போன்று நீங்களும் அடுத்தவர்க்கு செய்திருக்கலாம். தக்க தருணத்தில் ஒருவருக்கு நீங்கள் கூறிய அறிவுரை அவர் தம் வாழ்வில் எடுத்த மிக முக்கியமான முடிவுக்கு காரணமாக இருந்திருக்கும். சில மனிதரை பார்த்தவுடன் பேச வேண்டும் என்றல் உந்துதல் இருந்ததுண்டா?

இரு மனிதர்களுக்கு இடையே உள்ள இந்த ஈர்ப்பை நான் “நடனம்” என்று கூறுவேன். நாம் எப்பொழுதும்

relationships

யாரவது ஒருவருடன் நடனம் ஆடிக்கொண்டே இருக்கிறோம். நாம் திறந்த மனதுடன், விருப்பத்துடன் இருக்கும் பொழுது, அடுத்தவரின் கனவுகள் நிறைவேறுவதற்கான அனுபவங்களில் பங்கேற்கிறோம். அடுத்தவருக்கு நமக்கு இதேயே செய்கின்றனர். இந்த அனுபவங்களில் பலதும் நேர்மறையான ஆற்றல் கொண்டதாக இருக்கிறது; மனம் மகிழ்ச்சியான நிலையில் இருக்கிறது. வேறு சில அனுபவங்கள் எதிர்மறை ஆற்றலை விளைவிக்கிறது; அப்பொழுது மனம் கவலை கொள்கிறது; சோர்வடைகின்றது.

ஈர்ப்பு விதி எப்படி செயல்படுகிறது என்று நமக்கு தெரியாவிட்டாலும் அது எப்பொழுதும், ஒவ்வொரு நொடியும் உயிர்ப்புடன் உள்ளது என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எளிதாக சொல்வதென்றால், நாம் ஒரு காந்தம் போல; நம் எண்ணங்கள், உணர்வுகள் ஆகிவற்றின் அடிப்படையில் நம் வாழ்வில் அனைத்தையும் ஏற்கிறோம். நம் எண்ணங்களின்,உணர்வுகளின் தன்மையை முழுமையாக புரிந்துகொண்டோம் என்றால், அவற்றை செம்மைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, நம் வசம், நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, நமக்கு இதுதான் வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்கக்கூடிய நிலையில் ஈர்ப்புவிதியை பயன்படுத்தலாம்.

உறவுகளும் ஈர்ப்புவிதியும் என்று பேசும்பொழுது, பல கேள்விகள் எழுகின்றன.

ஒரு குறிப்பிட்ட நபரை என் வாழ்வில் ஈர்க்க முடியுமா?

என் நண்பர், குடும்பத்தார், அல்லது சகா பணியாளருடன் ஏற்பட்ட விரிசல் நான் ஈர்த்ததுதானா? நான் தான் அதற்கு பொறுப்பா? நான் விரும்பும் உறவை ஈர்ப்பது எப்படி?

Close Up Photo of Rodent and Person

நம் வாழ்வில் நாம் ஈர்க்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும், நாம் அறிந்தோ, அறியாமலோ வெளிப்படுத்தும் உணர்வு அதிர்வலைகளுடன் எதோ ஒரு விதத்தில் பொருந்தி போகிறவர்கள் தான்.

நாம் என்ன விதமான அதிர்வலைகளை வெளிப்படுத்துகிறோம் என்று எப்படி தெரிந்துகொள்வது? நீங்கள் ஈர்த்தது என்ன என்று பாருங்கள். ஒரு போரனமான பொருத்தம் இருப்பதை காணலாம்.

நாம் உயர்ந்த, நேர்மறையான மனநிலையில் இருக்கும் பொழுது, அதற்கு பொருத்தமான மனிதர்களையும் அனுபவங்களையும் ஏற்போம். சற்றே ஆற்றல் குறைந்த, சோர்வான மனநிலையில் இருக்கும் பொழுது, அதற்கு ஏற்றார் போல அனுபவங்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு, ஒரு நண்பர் போன் செய்து தன குறைகளைப்பற்றி நம்மிடம் சொல்லுவார். வேறு ஒருவர் தன ஆரோக்கியம் குறித்த கவலையை நம்மிடம் தெரிவிப்பார்.

நம் உணர்வுகளின் தன்மையை முழுதும் புரிந்து கொள்ளும் பொழுது, இந்த பொருத்தங்களை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். எது வேண்டும், எது வேண்டாம் என்று நாம் தேர்வு செய்யலாம். நம் உணர்வு அதிர்வலைகளை வேறொரு உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்ல இது உதவும்.

ஈர்ப்புவிதியின் மூலம் ஆற்றல் மிக்க  தகவல்களைக்கொண்டு, ஒருவர் சரியான முடிவுகளை மேற்கொண்டு தங்கள் உறவுகளின் தன்மையை புதிய பார்வையில் பார்த்து புரிந்துகொள்ள வழிவகை செய்ய முடியும்.

மகிழ்ச்சியான, முழுமையான உறவுமுறைகளில் நடனமாட அதிகாரம் படைப்போம் !

எல்லோரும் வாழ்க நலமுடன் !

Everything is connected to everything else. … Everything that exists seen and unseen are connected to each other, inseparable from each other to a field of divine oneness. Like attracts like.

I am a positive minded, creative, energetic, enthusiastic person. My purpose in life is to be helpful to people in as many ways as possible. Being a Motivational Speaker is one among them. Thanks to the all powerful, limitless Universe that uses me to my fullest potential !

For motivational, self-development videos, visit my Youtube channel KUVIAM

 

 

Add Comment